மாஸ்கோவில் உக்ரேன் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

மாஸ்கோவில் உக்ரேன் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

1 mins read
afdac25e-55c0-4ac0-ac77-f98dc1562df9
-

மாஸ்கோ: ரஷ்ய தலை­ந­கர் மாஸ்­கோ­மீது உக்­ரேன் ஏவு­க­ணைத் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளது. இது, உக்­ரேன் இது­வரை மேற்­கொண்­டுள்ள மிகப் பெரிய ஏவு­கணைத் தாக்­கு­தல்­களில் ஒன்று.

தாக்­கு­த­லில் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் உட்­பட பல கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன

கடந்த சில வாரங்­க­ளாக ரஷ்­யா­வின் உட்­பு­றங்­களில் கூடு­த­லான தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளன. ரஷ்­யா­வின் எண்­ணெய்க் குழாய் கட்­ட­மைப்பு­கள் உள்­ளிட்­ட­வற்­றின்­மீது தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இம்­மா­தத்­தின் தொடக்­கத்­தில் ரஷ்ய அதிபர் மாளிகைமீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு உக்­ரேன்­தான் கார­ணம் என்று ரஷ்யா கூறி­யது.

ரஷ்ய அதிபர் மாளிகையைத் தான் தாக்கவில்லை என்று உக்­ரேன் கூறி­யி­ருந்­தது. எனி­னும், அது உக்­ரே­னின் செயல் என்று அமெ­ரிக்க உள­வுத்­துறை அதி­கா­ரி­கள் நம்­பு­வ­தாக நியூ­யார்க் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தி­ருந்­தது.

மாஸ்­கோ­வில் நேற்று அதி­காலை மேற்­கொள்­ளப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­த­லில் இரு­வர் காய­ம­டைந்­த­தாக மாஸ்கோ நகர மேயர் செர்­கெய் சொப்­யா­னின் கூறினார். அவர்­களில் ஒரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்பிட்டார்.

மாஸ்­கோ­வின் விமான நிலை­யங்­கள் தொடர்ந்து இயங்­கின. உயி­ரி­ழப்பு குறித்து தக­வல் ஏதும் இல்லை.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இந்தத் தாக்­கு­தல் குறித்து உக்­ரேன் கருத்து ஏதும் தெரி­விக்­க­வில்லை.

முன்­ன­தாக உக்­ரே­னிய ஆகா­யப் படைத் தளங்­கள்­மீது ரஷ்­யா­வும் ரஷ்­யா­வின் தொழில்­துறை நிலை­யங்­கள்­மீது உக்­ரே­னும் தாக்கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக ரஷ்யா கூறி­யி­ருந்­தது. ரஷ்யா-உக்ரேன் போர் 15 மாதங்களாக நீடித்து வந்துள்ளது.