கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் சதித் திட்டத்தைத் தீட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஜோ லோ, மக்காவில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. மலேசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவான எம்ஏசிசி இதை உறுதிப்படுத்தியது.
ஜோ லோ உட்பட 1எம்டிபி வழக்கில் தேடப்படுவோர் மக்காவில் இருக்கின்றனர் என்று நம்புவதாக அல் ஜஸீரா ஊடகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் எம்ஏசிசி குறிப்பிட்டது.
ஜோ லோவை மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவர தமது அரசாங்கம் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் சட்ட அமைச்சர் செரி அஸாலினா ஓத்மானும் முன்னதாகக் கூறியிருந்தனர்.