விண்வெளித் துறையில் சீனா முத்திரை

விண்வெளித் துறையில் சீனா முத்திரை

1 mins read
13e977c5-13ee-460c-b0c8-019fb1a65bbf
-

ஜியூச்­சு­வான் (சீனா): தியாங்­கோங் விண்­வெளி நிலை­யத்­துக்கு சீனா மூன்று விண்­வெளி வீரர்­களை அனுப்பி வைத்­துள்ளது. பெய்­ஹாங் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­ய­ரான குய் ஹாய்ச்­சாவ் என்ற விஞ்­ஞா­னி­யும் மூவ­ரில் ஒரு­வர்.

முதன்­மு­றை­யாக விஞ்­ஞா­னி­யா­கப் பணி­பு­ரி­யும் பொது­மக்­களில் ஒரு­வரை சீனா விண்­வெளிக்கு அனுப்­பி­யி­ருக்­கிறது. 2030ஆம் ஆண்­டுக்­குள் நில­வுக்கு விண்­வெளி வீரர்­களை அனுப்­பு­வது சீனா­வின் இலக்கு.

ராணு­வத்­தின் நிர்­வாகத்­தில் இருக்­கும் விண்­வெளித் துறைக்கு சீனா பல பில்­லி­யன் டாலர் செலவு செய்­துள்­ளது. இத்­து­றை­யில் அமெ­ரிக்கா, ரஷ்யா ஆகிய நாடு­க­ளு­டன் போட்­டி­யிடும் அள­விற்கு வளர்ச்­சி­ய­டை­வது அதன் நோக்­கம்.

சீனா­வின் ஷென்­சுவோ-16 விண்­வெளி வாக­னம், லோங் மார்ச் உந்­து­க­ணை­யி­லி­ருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. வட­மேற்கு சீனா­வில் இருக்­கும் ஜியுச்­சு­வான் துணைக்­கோல் நிலை­யத்­தில் உள்­ளூர் நேரப்­படி நேற்று காலை 9.31 மணிக்கு இந்­நி­கழ்வு இடம்­பெற்­றது.

ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­ன­மும் சீன அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான தொலைக்­காட்­சி­யும் இக்­காட்சி பதி­வான காணொ­ளி­களை வெளி­யிட்­டன.

தியாங்­கோங் விண்­வெளி நிலை­யத்தை மைய­மா­கக்கொண்டே சீன விண்­வெ­ளித்துறை இயங்­கு­கிறது.