இந்தோனீசியாவின் புதிய தலைநகரத்துக்கான திட்டங்கள் பகல்கனவாகப் பார்க்கப்படுகின்றன

1 mins read
add3e8d9-74aa-4b6b-98d4-75cacd6aaeb7
-

ஜகார்த்தா: அதி­ந­வீன அம்­சங்­களு­டன் தனது புதிய தலை­நகரான நுசாந்­தா­ராவை உரு­வாக்க இந்­தோ­னீ­சியா திட்­ட­மிட்­டுள்­ளது. அங்கு அறி­வார்ந்த கட்­ட­டங்­கள், பறக்­கும் வாக­னங்­கள் உட்­பட பல மாபெ­ரும் வசதி­களைச் செய்து தரு­வது அந்­நாட்­டின் இலக்கு.

எனி­னும், இப்­ப­டிப்­பட்ட ஒரு நகரை உரு­வாக்­கு­வது சாத்தியம்தானா என்ற கேள்­வி­யும் நிலவி வரு­கிறது. நகரை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைப்­ப­தற்­கான நாளும் நெருங்கு­கிறது.

நுசாந்­தாரா நகரை எதிர்­பார்த்­த­படி அமைக்­கப் போது­மான நிதி இல்லை என்று முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதோடு, அதி­ந­வீன அம்­சங்­க­ளைச் சேர்க்க அவற்­றுக்­கான தொழில்­நுட்ப முறைகளும் கிட்­டத்­தட்ட அறவே இல்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி­யன்று இந்­தோ­னீ­சியா அதன் 79வது சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டு­கிறது.

அடுத்த ஆண்­டு­தான் நுசாந்­தா­ராவை அதி­க­ர­பூர்­வ­மா­கத் திறக்­கத் திட்­ட­மிடப்பட்டுள்ளது.