சிங்கப்பூரில் அமெரிக்க தற்காப்பு அமைச்சருடன் சந்திப்பு நடத்த சீனா மறுப்பு

சிங்கப்பூரில் அமெரிக்க தற்காப்பு அமைச்சருடன் சந்திப்பு நடத்த சீனா மறுப்பு

1 mins read
5c59deb2-a5e1-49f5-be0e-884e392cff9b
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க, சீன தற்­காப்பு அமைச்­சர்­கள் சிங்­கப்­பூ­ரில் சந்­திப்பு நடத்த அமெ­ரிக்கா கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. அந்த கோரிக்­கையை சீனா மறுத்­துள்­ளது.

தற்­போது சீனா­வின் தற்­காப்பு அமைச்­ச­ராக இருக்­கும் லி ஷாங்­ஃபு­மீது வாஷிங்­டன் தடை உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­தி­ருந்­தது. அதைத் தொடர்ந்து சந்­திப்­புக்கு சீனா ஒப்­பு­தல் வழங்­க­வில்லை. 2018ஆம் ஆண்டு விதிக்­கப்­பட்ட தடை உத்­த­ர­வு­கள் விலக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது சீனா­வின் வாதம். சீனா­வின் மறுப்பு, வெள்ளை மாளி­கைக்­குப் பின்­ன­டை­வா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­றும் ஷங்­ரிலா தற்­காப்­பு அமைச்சர்கள் சந்­திப்­பில் அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லோய்ட் ஆஸ்­டி­னும் திரு லியும் பேச்­சு­வார்த்தை நடத்த அமெ­ரிக்கா கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. ஷங்­­ரிலா சந்­திப்பு, ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் முக்­கி­ய­மான தற்­காப்­புச் சந்­திப்­பா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

சீனா­வு­ட­னான ராணு­வத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்த அமெ­ரிக்கா முயற்சி எடுத்து வந்­துள்­ளது. சீனா அதி­கம் ஒத்­து­ழைக்­க­வில்லை.