'மலேசியாவில் வெறுப்புப் பேச்சு அதிகரித்தது'

'மலேசியாவில் வெறுப்புப் பேச்சு அதிகரித்தது'

1 mins read
9cdc04c7-4f22-447c-a11c-011666bf5332
-

கோலா­லம்­பூர்: சென்ற ஆண்டு நவம்­பர் மாத்ம மலே­சி­யா­வின் பொதுத் தேர்­தல் நடை­பெற்­றது. அப்­போது அந்­நாட்­டில் சமூக ஊட­கங்­களில் பதி­வான வெறுப்பை வெளிப்­ப­டுத்­தும் கருத்­து­கள் கணி­ச­மாக அதி­க­ரித்­த­தென ஆய்வு ஒன்­றில் தெரிய வந்­துள்­ளது.

அதோடு, இன ரீதி­யான வெறுப்­புப் பேச்­சுக்­குப் பின்­னால் அதி­கம் இருந்­தது பாஸ் கட்சி என்­றும் ஆய்­வில் தெரி­விக்­கப்­பட்­டது. பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் இருக்­கும் பாஸ், நாடா­ளு­மன்­றத்­தில் 43 இடங்­களை வகிக்­கிறது.

சிஐஜே எனும் சுயேச்சை செய்­தி­யா­ளர் நிலை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சைன்ஸ் மலே­சியா பல்­க­லைக்­க­ழ­கம், மலே­சியா சாபா பல்­க­லைக்­க­ழ­கம் போன்­ற­வற்­று­டன் இணைந்து சிஐஜே அறிக்­கை­யைத் தயார்­செய்­தது.

அர­சி­யல் சூழ­லில் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் 90க்கும் மேற்­பட்ட சமூக ஊட­கக் கணக்­கு­க­ளைக் கொண்டு ஆய்வு நடத்­தப்­பட்­டது. ஆய்­வில் டுவிட்­டர், ஃபேஸ்புக், யூடி­யூப், டிக்­டாக் ஆகிய சமூக ஊட­கங்­களில் உள்ள கணக்­கு­கள் ஆரா­யப்­பட்­டன.

சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் 10ஆம் தேதி­யன்று மலே­சிய நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டது. அதற்­குப் பிறகு நவம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் மலே­சிய வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக தொங்கு நாடா­ளு­மன்­றம் உரு­வா­னது. ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு திரு அன்­வார் இப்­ரா­கிம் பிர­த­ம­ரா­கப் பதவி வகிப்­பார் என்று முடி­வா­னது.

பக்­கத்­தான் ஹரப்­பான், தேசிய முன்­னணி உள்­ளிட்­ட­வற்­றைக் கொண்ட கூட்­டணி ஆட்­சி­யின் தலை­வ­ராக திரு அன்­வார் பொறுப்பு வகிக்­கி­றார்.