விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
07123d32-58cf-45cc-b3ea-cffb00031a94
-

எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் மார்சியால் இல்லை

லண்டன்: இவ்வாண்டின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் ஆன்டனி மார்சியால் (படம்) விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காயமுற்றிருப்பதே அதற்குக் காரணம்.

இந்தப் பருவத்தில் பலமுறை காயமுற்றிருக்கிறார் மார்சியால். அதனால் இவரால் அதிகம் விளையாட முடியாமல் போனது. எனினும், விளையாடியபோதெல்லாம் அடிக்கடி கோல்களைப் போட்டிருக்கிறார்.

எஃப்ஏ கிண்ண இறுதியாட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. மான்செஸ்டர் யுனைடெட்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தைத் தொடர்ந்து மூன்று முறை வென்றிருக்கும் மான்செஸ்டர் சிட்டியும் அதில் மோதுகின்றன.

யுனைடெட் எஃப்ஏ கிண்ணத்தைக் கடைசியாக வென்று ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

யுனைடெட்டில் சேர விரும்பும் நட்சத்திரம் நெய்மார்

பாரிஸ்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டில் பிரேசிலிய நட்சத்திரம் நெய்மார் (படம்) சேர விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் விளையாடுகிறார் 31 வயது நெய்மார்.

இந்தக் காற்பந்துப் பருவம் முடிந்தவுடன் இவர் பிஎஸ்ஜியிலிருந்து வெளியேறுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் உள்ளிட்ட குழுக்கள் நெய்மாரை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

எனினும், நெய்மாருக்கு யுனைடெட்டில் சேரத்தான் ஆசை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.