பேங்காக்: தாய்லாந்தில் வீட்டை வாங்கிய ஒருவர், அதன் முன்னைய உரிமையாளரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து வெளியேற மறுத்ததால் பழைய உரிமையாளர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தாய்லாந்தின் பத்தும் தானி மாநிலத்தில் இருக்கும் தன்யாபுரி வட்டாரத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்ததென பேங்காக் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டது.
கொலை செய்ததாக நம்பப்படும் 66 வயது டெக்கா பாயாக்கா காவல்துறையிடம் சரணடைந்தார்.
மாண்டவர் கமோல்பொர்ன் டொந்தோங் எனும் 52 வயது மாது. கொலை நிகழ்ந்த பிறகு சுமார் நான்கு மணிநேரத்துக்கு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் திரு டெக்கா சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

