ரஷ்யா: உக்ரேனின் கடைசி போர்க்கப்பலை அழித்துவிட்டோம்

ரஷ்யா: உக்ரேனின் கடைசி போர்க்கப்பலை அழித்துவிட்டோம்

1 mins read
bd3025fe-fdcf-4b97-a2e7-595e7533c0fb
-

மாஸ்கோ: உக்­ரே­னின் கடைசி போர்க்­கப்­பல் எனக் கரு­தப்­படும் 'யூரிய் ஒலெ­ஃபி­ரெங்கோ'வை தனது படை­கள் அழித்­து­விட்­ட­தாக ரஷ்­யா­வின் தற்­காப்பு அமைச்சு கூறி­யுள்­ளது. இரண்டு நாள்­க­ளுக்கு முன்பு இந்­நிகழ்வு இடம்பெற்றதாக ரஷ்யா தெரி­வித்­தது.

ஏவு­க­ணை­க­ளால் இந்­தப் போர்க்­கப்­பல் தாக்­கப்­பட்­ட­தாக ரஷ்ய தற்­காப்பு அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார். ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இதன் தொடர்­பில் உக்­ரே­னின் கடற்­படை கருத்து தெரி­விக்­க­வில்லை.

முன்­ன­தாக, தெற்கு ரஷ்­யா­வில் உள்ள எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஏவு­க­ணைத் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது. அதோடு, லுஹான்ஸ்க் வட்­டா­ரத்­தில் உள்ள கிரா­மம் ஒன்­றின்­மீது உக்­ரேன் நடத்­திய தாக்­க­த­லில் குறைந்­தது ஐவர் மாண்­ட­னர் என்று மாஸ்கோ நிய­மித்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஆகக் கடைசி அதில் நில­வ­ரப்­படி 19 பேர் காய­ம­டைந்­த­னர்.

மேலும், தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக ரஷ்ய-உக்­ரேன் எல்­லைக்கு அருகே இருக்­கும் ரஷ்ய நகர்­மீ­தும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. அந்­தத் தாக்­கு­த­லில் நால்­வர் காய­ம­டைந்­த­னர்.

இவற்றோடு, பெல்­கொ­ரோட்­டில் உக்­ரே­னிய தாக்­கு­த­லால் அடைக்­க­லம் நாடு­வோ­ருக்­கான நிலை­யத்­தில் ஒரு­வர் மாண்­ட­தா­க­வும் இரு­வர் காய­முற்­ற­தா­க­வும் அவ்­வட்­டார ஆளு­நர் கூறி­யி­ருந்­தார்.