வருங்கால மனைவிக்கு கவச வாகனத்தில் தங்கம், ரொக்கம்

1 mins read
f650ca43-546c-42b4-9f62-109586083a41
-

பெய்­ஜிங்: சீனா­வில் திரு­ம­ணம் செய்து கொள்ள விரும்­பும் ஆண்கள் தங்­கள் திரு­மணச் செல­வைப் பற்றி நினைக்­கும் முன் வருங்­கால மனை­வி­யின் குடும்­பத்­தாரை பரிசு மழை­யால் குளிர்­விக்க வேண்­டும். இதில் சீனா­வின் ஸிஜி­யாங் மாநி­லத்­தில் உள்ள ஓர் ஆட­வர் அள­வுக்கு அதி­க­மா­கவே தமது வருங்­கால மனை­வி­யின் குடும்­பத்­தாரை மகிழ்­விக்க முயன் றுள்ளார். அவர் வருங்­கால மனை­வி­யின் குடும்­பத்­தா­ருக்கு 9.98 யுவான் ரொக்­கம் (S$ 1.9மில்­லி­யன்), தங்­கக் கட்­டி­கள், விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரங்­கள் ஆகி­ய­வற்றை வருங்­கால மனை­வி­யின் இல்­லத்­துக்கு கவச வாக­னத்­தில் அனுப்பி வைத்­தார். இவை யாவற்­றை­யும் அவர் மங்­க­ள­க­ர­மான சிவப்பு நிற ஆறு இரும்­புப் பெட்­டி­களில் அலங்­க­ரித்து அனுப்­பி­யுள்­ளார்.

இதற்கு பாது­காப்­பாக நான்கு காவ­லர்­க­ளை­யும் அவர் கூடவே அனுப்­பி­னார். அவர் அனுப்­பிய ரொக்­கப் பணம் பின்­னர் வங்­கி­யில் தமது அன்பு வருங்­கால மனை­வி­யின் பெய­ரில் சேமித்து வைக்­க­வும் அவர் ஏற்­பாடு செய்­தி­ருந்­தார். இந்த விலை­ம­திப்­பில்லா மண­ம­கள் பரி­சுப் பொருட்­கள் சீன வழக்­கத்­தில் 'சாய் லி' என்று அழைக்­கப்­ப­டு­கிறது. இவற்­றைக் கண்­ட­வர்­கள் இது குறித்து இணை­யத்­தில் ஒரு பக்­கம் பொறா­மை­யு­ட­னும் மறு­பக்­கம் விமர்­சிக்­கும் வகை­யி­லும் தங்­கள் பதி­வு­களை போட்­டுள்­ள­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.