வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்க செலவினத்துக்கு தேவைப்படும் நிதியைப் பெற அந்நாட்டு பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ள சட்ட வடிவுக்கு தற்பொழுது அந்நாட்டு செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக, அமெரிக்க செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்த சட்ட வடிவுக்கு 63 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், எதிர்த்து 36 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த சட்ட வடிவுக்கு ஆதரவாக குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளையும் சேர்ந்த மிதவாத உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. எனினும், இவர்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட இணக்கத்தில் இரு கட்சி உறுப்பினர்களுக்குமே முழுத் திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.

