துருக்கி அதிபராக எர்டோகன் பதவியேற்பு

1 mins read
7010e8d4-6dc3-4782-825e-7314a8a1860b
-

அங்காரா: துருக்கியில் ரெஸப் தயூப் எர்டோகன் மீண்டும் அதிபராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் புதிய அமைச் சரவையை அமைக்க விருக்கிறார். அந்த அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியின் நீண்ட கால அதிபரான அவருக்கு மே 28ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 52.2% ஆதரவு கிடைத்தது. பெரும் பாலான கருத்துக் கணிப்புகளைப் போலவே அவரது வெற்றி அமைந்ததாகக் கூறப்படுகிறது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியும் அவரது வெற்றியைப் பாதிக்க வில்லை.