ஆப்கானிஸ்தானில் நஞ்சு வைப்பு; பல மாணவிகள் மருத்துவமனையில்

ஆப்கானிஸ்தானில் நஞ்சு வைப்பு; பல மாணவிகள் மருத்துவமனையில்

1 mins read
e4fe9e92-c2ad-4eca-8e98-8e92fa5262a2
-

காபூல்: வடஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள பள்ளி ஒன்­றில் நஞ்சு வைக்­கப்­பட்­ட­தால் குறைந்­தது 60 மாண­வி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட 80 மாண­வி­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் சில தக­வல்­கள் வெளி­யா­யின.

சர்-இ-பொல் மாநி­லத்­தில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. ஆப்­கா­னிஸ்­தா­னில் தலி­பான் ஆட்­சி­யில் பெண்­கள் கல்வி குறித்து பெரும் சர்ச்சை இருந்­து­வ­ரும் வேளை­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

அண்டை நாடான ஈரா­னில் பல பெண்­கள் பள்­ளி­களில் நஞ்சு வைப்பு சம்­ப­வங்­கள் இடம்­பெற்­று­வந்­துள்­ளன. அவற்­றைத் தொடர்ந்து இப்­போது ஆப்­கா­னிஸ்­தா­னில் இவ்­வாறு நடந்­துள்­ளது.

அடை­யா­ளம் தெரி­யாத சிலர் சஞ்­சா­ராக் வட்­டா­ரத்­தில் இருக்­கும் பெண்­கள் பள்­ளிக்­குள் நுழைந்து நஞ்சு வைத்­த­தாக சர்-இ-பொல் காவல்­து­றைப் பேச்­சா­ளர் கூறி­னார். மாண­வி­கள் வகுப்­ப­றை­க­ளுக்­குச் சென்­ற­போது அவர்­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.