மாஸ்கோ: டொனியெட்ஸ் வட்டாரத்தின் ஐந்து பகுதிகளில் உக்ரேன் மேற்கொள்ளவிருந்த பெரிய அளவிலான தாக்குதல்களைத் தனது படைகள் முறியடித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரேனின் சார்பில் போரில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான துருப்புகளைத் தனது படைகள் கொன்றுவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்தது.
ரஷ்யத் தாக்குதல்களுக்குப் பதிலடித் தாக்குதல்களை நிகழ்த்தப் போவதாக உக்ரேன் கூறி வந்தது. இப்போது ரஷ்யா முறியடித்ததாகச் சொல்லும் தாக்குதல்கள் அவைதானா என்பது தெரியவில்லை.
ரஷ்யா கூறுவதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆகக் கடைசி நிலவரப்படி இது குறித்து உக்ரேனிய தற்காப்பு அமைச்சும் உக்ரேனிய ராணுவமும் கருத்து ஏதும் வெளியிடவில்லை.
250 உக்ரேனியப் படையினரைக் கொன்றதாகவும் 16 டாங்கிகள் உள்ளிட்டவற்றை அழித்ததாகவும் ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு சொன்னது.