அகதிகள் விவகாரம்; பங்ளாதேஷ் வாக்குறுதி

அகதிகள் விவகாரம்; பங்ளாதேஷ் வாக்குறுதி

1 mins read
c31a3726-8d0a-434e-ae93-5ecd27a90561
-

டாக்கா: மியன்­மா­ருக்­குத் திரும்­பிச் செல்ல விருப்­பம் இல்­லாத ரொஹிங்­கியா அக­தி­கள் அந்­நாட்­டுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று பங்­ளா­தேஷ் உத்­த­ர­வா­தம் தந்­தி­ருப்­ப­தாக ஐநா­வைச் சேர்ந்த உயர் அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

"மியன்­மா­ருக்­குத் திரும்­பிச் செல்ல விருப்­ப­முள்ள அக­தி­கள் மட்­டுமே அனுப்­பி­வைக்­கப்­பட வேண்­டும். அக­தி­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்தி மியன்­மா­ருக்கு அனுப்­பக்­கூ­டாது," என்று ஐநா­வின் அக­தி­கள் பிரி­வின் துணை உயர் ஆணை­யர் கெலி கிளெ­மண்ட்ஸ் கூறி­னார். பங்­க­ளா­தே­ஷுக்கு நான்கு நாள் பய­ணம் மேற்­கொண்ட அவர், இது

­கு­றித்து அர­சாங்க அதி­கா­ரி­கள், அக­தி­கள் ஆகி­யோ­ரி­டம் பேசி­னார். பங்ளாதேஷில் ஏறத்தாழ ஒரு மில்லியன் ரொஹிங்கியா அகதிகள் உள்ளனர்.