மலேசியாவில் மழை குறையலாம்

‘எல் நினோ’ வானிலை விளைவால் 20% முதல் 40% வரை குறையக்கூடும்

கோலா­லம்­பூர்: கடந்த சில வாரங்­க­ளாக வெப்ப அலையை எதிர்­கொண்டு வரும் மலே­சியா, ஜூன் முதல் வலு­வி­ழந்த ‘எல் நினோ’ பரு­வ­நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்­நோக்கக்­கூ­டும் என்று இயற்கை வளம், சுற்­றுப்­புற, பரு­வ­நிலை மாற்ற அமைச்­சர் நிக் நஸ்மி நிக் அக­மது தெரி­வித்து உள்­ளார்.

நவம்­ப­ருக்­குள் இந்த வானிலை நிகழ்­வின் தீவி­ரம் மித­மான அளவை எட்­டக்­கூ­டும் என்­றார் அவர். இத­னால், மழை பெய்­வது 20 முதல் 40 விழுக்­கா­டு­வரை குறை­யக்­கூ­டும்.

‘எல் நினோ’ வானிலை மாற்றத்தால் ஏற்­படும் சில விளை­வு­கள், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்­ரல் மாத­வாக்­கில் தென்­ப­டக்­கூ­டும் என்று அவர் நாடா­ளு­மன்­றத்­தில் சொன்­னார்.

தொடர்ந்து சில நாள்­க­ளாக வெப்­ப­நிலை 38 டிகிரி செல்­சி­யசைத் தாண்­டும் கடு­மை­யான வெப்ப அலை ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இது­வரை இல்லை என்று திரு நிக் நஸ்மி கூறி­னார்.

“என்­றா­லும், வழக்­க­மான வெப்­ப­நி­லை­யை­விட சற்று கூடு­தல் வெப்­ப­நிலை நாட்­டில் பதி­வாகக்­கூ­டும். அந்த அதி­க­ரிப்பு 0.5 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 1 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும்,” என்­றார் அவர்.

‘எல் நினோ’ நிகழ்­வால் ஏற்­படும் வெப்­ப­மான, வறண்ட வானிலை ஆசி­யா­வில் எங்­கும் உணவு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு மிரட்­ட­லாக அமை­கிறது. மலே­சி­யா­வி­லும் இந்­தோ­னீ­சி­யா­வி­லும் செம்­பனை எண்­ணெய், அரிசி உற்­பத்தி பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர். உல­கின் செம்­பனை எண்­ணெய் உற்­பத்­தி­யில் இவ்­விரு நாடு­களும் 80 விழுக்­காடு பங்கு வகிக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!