தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷில் கடும் வெப்பம்: பள்ளிகள் மூடல், மின்தடை

1 mins read
2d89af9d-fb0a-4e80-b683-d5348b939b27
-

டாக்கா: பங்­ளா­தே­ஷில் நில­வும் கடு­மை­யான வெப்ப அலை கார­ண­மாக இந்த வாரம் அங்­கு உள்ள தொடக்­கப்­பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. அதோடு, அங்கு அடிக்­கடி மின்­த­டை­யும் ஏற்­ப­டு­கிறது.

பத்து நாள்­க­ளுக்கு முன்பு 32 டிகிரி செல்­சி­ய­சாக இருந்த அதிக­பட்ச வெப்­ப­நிலை, கிட்­டத்­தட்ட 41 டிகிரி செல்­சி­ய­சாக உயர்ந்­தது. கடும் வெப்­பம் விரை­வில் முடி­வுக்கு வரு­வ­தா­கத் தெரி­ய­வில்லை என்று பங்­ளா­தேஷ் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இன்­னும் இரு வாரங்­க­ளுக்கு மின்­தடை ஏற்­ப­டக்­கூ­டும் என்று மின்­சார, எரி­சக்தி, கனிம வளத்­துறை துணை அமைச்­சர் நஸ்­ருல் ஹமீது தெரி­வித்­தார்.

கடும் வெப்­பம் கார­ண­மாக மக்­கள் பல­ரும் மருத்­துவ உதவியை நாடி வரு­கின்­ற­னர்.