சுதந்திர தேவி சிலையை புகைமூட்டம் சூழ்ந்தது

1 mins read
d8d04413-97ca-487f-95ce-96d9ce31be9e
-

நியூ­யார்க்: கன­டா­வின் சில பகுதி­களில் காட்­டுத்தீ கட்­டுக்­கடங்­கா­மல் பரவி வரு­வ­தால் வட­அ­மெ­ரிக்­கா­வி­லும் புகை­மூட்டப் பிரச்­சினை தலை­தூக்­கி­ உள்­ளது.

புகை­மூட்­டம் கார­ண­மாக நியூ­யார்க் நக­ரம் முழு­வ­து­தி­லும் காற்­றுத்­த­ரம் நேற்று முன்­தி­னம் மோச­ம­டைந்­தது. அங்கு சுதந்­திர தேவி சிலை­யை­யும் வானு­யுரக் கட்­ட­டங்­க­ளை­யும் புகை­மூட்டம் சூழ்ந்­தது. மினசோட்டா முதல் மேச­சூ­செட்ஸ் வரை காற்றுத்­த­ரம் குறித்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

கன­டா­வில் 400க்கும் மேற்­பட்ட இடங்­க­ளுக்கு காட்­டுத்தீ பர­வி­யது. கிழக்கு கன­டா­வில் கியூ­பெக் நகர் காட்­டுத்­தீ­யால் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டது. காட்டுத்தீ, கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்டின் ட்ரூடோ, காட்­டுத்தீ குறித்து உள்­ளூர் அதி­கா­ரி­க­ளு­டன் தாம் தொடர்­பில் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி, காட்­டுத்தீ கார­ண­மாக கன­டா­வில் ஏறக்­கு­றைய 26,000 பேர் தங்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இவ்­வாண்டு இது­வரை கன­டா­வில் 2,200க்கும் அதி­க­மான காட்­டுத் தீச்­சம்­ப­வங்­கள் ஏற்­பட்டுள்­ள­தாக அந்­நாட்­டின் தீயணைப்­புத் துறை தெரி­விக்­கிறது.