பத்து ஆண்டுகளில் முதன்முறையாக நிமிர்ந்து நிற்க இளையருக்கு அறுவை சிகிச்சை தொடக்கம்

2 mins read
18ea723e-9799-45d2-ab5d-d459e5c98532
-

பெய்­ஜிங்: தன்­னெ­திர்ப்பு நோயால் (ஆட்டோ இம்­யூன் பிரச்­சினை) நிமிர முடி­யா­மல் உடல் வளைந்­து­போய் அவ­தி­யு­றும் 19 வயது இளை­ய­ருக்கு அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான ஜியாங் யான்­சென், கடை­சி­யாக நிமிர்ந்து நின்­றது 10 ஆண்­டு­களுக்கு முன்பு. காலப்­போக்­கில் அந்­நோய் மோச­ம­டைந்­த­தால் இவ­ரது கழுத்து முது­கைத் தொடும்­ அளவுக்குப் பின்­னோக்கி வளைந்­தது.

ஒரு மீட்­டர் உய­ர­முள்ள ஜியாங், சக்­கர நாற்­கா­லி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

தொடக்­கப்­பள்­ளி­யில் இருந்து, நாற்­கா­லி­யில் இவர் மண்­டி­யிட்ட நிலை­யில் வகுப்­ப­றை­யில் பாடங்­களைக் கவ­னிக்க வேண்­டி­ உள்ளது. வாசிப்­பதோ எழு­து­வதோ இவ­ருக்கு எளி­தான காரி­ய­மல்ல.

எனி­னும், வாழ்வை அர்த்­த­முள்ள வகை­யில் வாழ ஜியாங் உறு­தி­யு­டன் இருக்­கி­றார்.

"இப்­பொ­ழுதே என்­னால் எவ்­வ­ளவு கற்­றுக்­கொள்ள முடி­கி­றதோ அத்­த­னை­யை­யும் கற்க நான் முயற்சி செய்­கி­றேன். அப்­போ­து­தான், எனக்கு இருக்­கும் நோய் ஒரு­நாள் குணப்­ப­டுத்­தப்­பட்­ட­வு­டன், நான் ஓர் ஆற்­ற­லு­டைய மனி­த­னாக முடி­யும்," என்­றார் ஜியாங்.

இந்­நி­லை­யில், சிக்­க­லான சில அறுவை சிகிச்­சை­க­ளைச் செய்து­கொள்ள, ஷான்­டோங் மாநி­லத்­தில் இருக்­கும் தமது சொந்த ஊரி­லி­ருந்து கடந்த மாதம் பெய்ஜிங்­கிற்கு இவர் புறப்­பட்­டார். அந்த அறுவை சிகிச்­சை­கள் முடி­வ­டைய ஏறக்­கு­றைய மூன்று மாதங்­க­ளா­கும்.

ஜியாங் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு, "நீ திரும்­பும்­போது, உனக்கு இனி சக்­கர நாற்­காலி தேவைப்­ப­டாது. நீ நடந்து வர­லாம்," என்று தாயார் இவ­ரி­டம் கூறி­னார்.

முத­லா­வது அறுவை சிகிச்­சைக்­குப் பிறகு, ஜியாங்­கின் கழுத்து வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­யது.

முதுகை நிமிர்த்த இன்­னும் குறைந்­தது நான்கு அறுவை சிகிச்­சை­க­ளை­யா­வது இவர் செய்து­கொள்ள வேண்­டும்.