சோல்: வேலை தேடி இளையர்கள் பலரும் வெளியேறுவதால் தென்கொரியாவின் ஜேஜு தீவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது.
மே மாத நிலவரப்படி, ஜேஜு தீவில் 677,057 கொரியர்கள் குடியிருப்பாளர்களாக பதிவுசெய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 678,159ஆக இருந்தது.
ஜேஜு தீவில் குழந்தை பிறப்பும் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு குடியேறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும் அங்கு மக்கள்தொகை சரிந்து வருகிறது.

