தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவில் இருந்தது எலியின் தலையா வாத்தின் கழுத்தா; சீனாவில் சர்ச்சை

1 mins read
c5e4ecf0-9131-40ca-8915-5ca77bfc793b
உணவில் இருந்தது வாத்தின் தலைதான் என்று கூறும் கல்வி நிலையம் வெளியிட்ட குறிப்பு. படம்: வீபோ -

நான்சாங் (சீனா): சீனாவில் இருக்கும் ஒரு கல்வி நிலையத்தின் உணவுக் கடையில் மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் எலியின் தலை இருந்ததாகக் கூறப்படுகிறது.

அது எலியின் தலை அல்ல, வாத்தின் கழுத்து என்று அக்கடை வெளியிட்ட தகவல் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சீனாவின் நான்சாங் நகரில் நிகழ்ந்தது.

சீன சமூக ஊடகமான வீபோவில் இச்சம்பவம் குறித்த பதிவு புதன்கிழமை நிலவரப்படி 310 மில்லியனுக்கும் அதிகமான முறை காணப்பட்டுள்ளது.

ஜியாங்ஸு பலதுறைத் தொழிற்கல்லூரியில் சம்பவம் நிகழ்ந்ததாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்த பதிவுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று சீன சமூக ஊடங்களில் இடம்பெற்றன.

தவறு ஏதும் நிகழவில்லை என்று மூன்றாம் தேதியன்று கல்லூரி கூறியது.

உணவில் இருந்தது வாத்தின் தலை என்று உள்ளூர் உணவுப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுநாள் தெரிய வந்தது.

எனினும், சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் வழங்கப்படும் எல்லாவகை உணவுகளும் சோதித்துப் பார்க்கப்படும்.

வரும் நாள்களில் முடிவுகள் தெரியவரும்.