46 ஆண்டுகளுக்குப் பிறகு கிண்ணம் வென்ற வெஸ்ட் ஹேம்

46 ஆண்டுகளுக்குப் பிறகு கிண்ணம் வென்ற வெஸ்ட் ஹேம்

1 mins read
def034eb-4051-49c3-a7e9-9e6d30a90e9e
-

பிராக்: இவ்­வாண்­டின் யூயேஃபா கான்­ஃபி­ரன்ஸ் லீக் கிண்­ணத்தை வென்­றுள்­ளது இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துக் குழு­வான வெஸ்ட் ஹேம் யுனை­டெட்.

இது, இக்­குழு கடந்த 46 ஆண்­டு­களில் கைப்­பற்­றி­யி­ருக்­கும் முதல் கிண்­ணம்.

செக் குடி­ய­ர­சுத் தலை­ந­கர் பிராக்­கில் நடை­பெற்ற கான்­ஃபி­ரன்ஸ் லீக் போட்­டி­யின் இறு­தி­யாட்­டத்­தில் வெஸ்ட் ஹேம், இத்­தா­லி­யின் ஃபியொரென்­டி­னாவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது.

அனைத்து கோல்­களும் ஆட்­டத்­தின் பிற்­பா­தி­யில் விழுந்­தன.

62வது நிமி­டத்­தில் பெனால்டி வாய்ப்­பைக் கோலாக்கி வெஸ்ட் ஹேமை முன்­னுக்கு அனுப்­பி­னார் சயீத் பென்­ராமா.

67வது நிமி­டத்­தில் கோல் எண்­ணிக்­கை­யைச் சமப்­ப­டுத்­தி­னார் ஃபியொரென்­டி­னா­வின் கியாக்­கோமோ பொனா­வெஞ்­சுரா.

பிறகு ஆட்­டத்­தின் கடைசி சில நிமி­டங்­களில் வெற்றி கோலைப் போட்­டார் வெஸ்ட் ஹேமின் ஜேரட் போவன்.

கடந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பரு­வத்­தில் பெரி­தும் சிர­மப்­பட்­டது வெஸ்ட் ஹேம்.

அப்­ப­டி­யி­ருந்­தும் கான்­ஃபி­ரன்ஸ் லீக்­கில் வெற்­றி­கண்டு பல ஆண்­டு­க­ளாக கிண்­ணம் வெல்­லாத குறை­யைத் தீர்த்­து­வைத்­தது குழு­வின் ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­தது.