ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
f1b4cfec-4522-4ad1-9e75-d6eac8c5eb93
-

பெய்­ஜிங்: சீனா­வின் டியான்­ஜின் நக­ரில் உய­ர­மான அடுக்­கு­மாடி வீட்­டுக் கட்­ட­டங்­களில் வசிக்­கும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

சில இடங்­களில் நிலத்­தில் குழி­கள் விழுந்­த­தால் பல உய­ர­மான அடுக்­கு­மாடி கட்­ட­டங்­க­ளுக்கு அருகே இருக்­கும் சாலை­களில் கடந்த சில நாள்­களாகப் பெரிய விரி­சல்­கள் ஏற்­பட்­டுள்ளன. அதைத் தொடர்ந்து பாது­காப்­புக்­காக குடி­யி­ருப்­பா­ளர்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இம்­மா­தம் மூன்­றாம் தேதி நில­வ­ரப்­படி 25 தளங்­க­ளைக் கொண்ட குறைந்­தது மூன்று அடுக்­கு­மாடி கட்­ட­டங்­களி­லி­ருந்து மொத்­த­ம் 3,899 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெளி­யேற்­றப்­பட்­டுள்ளனர். சீன அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான குளோ­பல் டைம்ஸ் ஊட­கம் இந்த விவ­ரத்­தைத் தெரி­வித்­தது.

வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­கள் அரு­கில் இருக்­கும் ஹோட்­டல்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­னர். நிலத்­த­டி­யில் சுமார் 1,300 மீட்­டர் ஆழத்­தில் இருக்­கும் துவா­ரங்­க­ளால் விரி­சல்­கள் ஏற்­பட்­டதாக நில­வி­யல் வல்­லு­நர்­கள் கூறி­னர் என்று டியான்­ஜின் நகர அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் சமூக ஊட­கங்­களில் தெரி­வித்­தது.

சீனா­வில் கட்­ட­டப் பாது­காப்பு தொடர்­பில் கவலை இருந்து வரு­கிறது. இந்த விவ­கா­ரம் நிலை­மையை மேலும் மோச­ம­டை­யச் செய்­யக்கூடும் என்று அஞ்­சப்­படுகிறது.

சீனாவின் டியான்ஜின் நகரின் சாலைகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன