இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்கொள்ளும் 12க்கும் அதிகமான வழக்குகளுக்கு அவருக்கு மீண்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவரின் பிணை நீட்டிக்கப்பட்டது.
அதற்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு திரு இம்ரான் கான் மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அதோடு, அவரின் கட்சியில் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருந்த பலர் பதவியிலிருந்து விலகிக்கொண்டனர்.
வன்முறையில் ஈடுபடுவோர்மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் விளம்பரப் பிரிவு (ஐஎஸ்பிஆர்) கடந்த புதன்கிழமையன்று உறுதியளித்திருந்தது.