'ெகாலையாளிக்கு உயிரை மாய்த்துக்கொள்வதில் தோல்வி'

1 mins read
316a99f2-4180-4554-85e1-24d416b25213
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் தனது காத­லி­யைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் அதற்குப் பிறகு தனது உயி­ரை­யும் மாய்த்­துக்­கொள்ள முயன்றிருக்கிறார். எனி­னும், அந்த முயற்­சி­யில் அவர் தோல்வி­கண்­டார்.

ஆட­வர் ரயில் தண்­ட­வா­ளத்­தில் படுத்­தி­ருக்­கி­றார். ஆனால், தவ­றான தண்­ட­வா­ளத்­தில் படுத்­த்ததால் அவ­ரின் கண்­முன் ரயில் சென்­றது.

துணைக் காவல்­து­றை­யி­னர் அவரைக் கைது­செய்­த­னர்.

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ருக்கு அருகே இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. விரைவு ரயில் பாதை­யில் சலாக் சிலாட்­டான் நிலை­யத்­துக்கு அருகே ஆட­வர் பிடி­பட்­டார். இம்­மா­தம் மூன்­றாம் தேதி­யன்று இச்­சம்­ப­வம் நிகழ்ந்தது.

"சந்­தேக நபர் செராஸ் பகு­தி­யின் காவல்­து­றை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். கூட்­டு­ரிமை வீடு ஒன்­றில் தனது காதலி­யைக் கொன்­றதாக அவர் காவல்­துறை விசா­ர­ணை­யின்­போது தெரி­வித்­தார்," என்று பெட்­டா­லிங் ஜெயா காவல்­து­றைத் தலை­வர் முகம்­மது ஃபக்ரு­தீன் அப்­துல் ஹமீது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று கூறி­னார்.

சிலாங்­கூர் மாநி­லத்­தின் கெலானா ஜெயா பேட்­டை­யில் உள்ள கூட்­டு­ரிமை வீட்­டுக்கு ஆட­வர் காவல்­து­றை­யி­னரை அழைத்­துச் சென்­றார். அங்கு நினை­வி­ழந்த நிலை­யில் காதலி ரத்­தக் காயங்­க­ளுடன் படுத்­துக்­கி­டந்­தார். அவ­ருக்கு அருகே கத்தி ஒன்­றும் இருந்தது.