மீண்டும் குமுறியது அன்னாக் கிராக்காட்டுவா எரிமலை

1 mins read
6e9b9633-89b7-40b2-ab00-fbac0af7a2c2
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் அன்னாக் கிராக்­காட்­டுவா எரிமலை நேற்று குமு­றி­யது. அது மூன்று கிலோ­மீட்­ட­ருக்­கும் மேலான உய­ரத்­துக்கு சாம்­ப­லைக் கக்­கி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அன்னாக் கிராக்­காட்­டுவா என்­றால் 'கிராக்­காட்­டு­வா­வின் பிள்ளை' என்று பொருள்.

1883ஆம் ஆண்டு கிராக்­காட்டுவா எரி­மலை குமு­றி­யது. அது, வர­லாற்­றில் ஆக அதிக அழிவை ஏற்படுத்திய எரி­மலைக் குமு­றல்­களில் ஒன்­றாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதைத் தொடர்ந்து சென்ற நூற்­றாண்­டின் தொடக்­கத்­தில் அன்னாக் கிராக்­காட்­டு­வா­எரிமலையைக் கொண்ட தீவு கட­லி­லி­ருந்து எழுந்­தது. அன்னாக் கிராக்­காட்­டுவா நேற்று குமு­றி­ய­போது அது இந்­தோ­னீ­சி­யா­வின் ஜாவா, சுமத்­திரா தீவு­க­ளைப் பிரிக்­கும் நீரி­ணைக்கு மேல் சாம்பலைக் கக்­கி­யது.

உள்­ளூர் நேரப்­படி நேற்று காலை 8.46 மணிக்கு எரி­மலை குமு­றி­யது. சேதம் ஏற்­பட்­ட­தா­கவோ உயி­ரி­ழப்பு இருந்­த­தா­கவோ தக­வல் ஏதும் இல்லை.

எரிம­லைக் குமு­ற­லின் மையப் பகு­தி­யைச் சுற்றி ஐந்து கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வில் எவ்­வித நட­வடிக்­கை­யி­லும் ஈடு­ப­ட­வேண்­டாம் என்று பொது­மக்­க­ளுக்கு எச்­சரிக்கை விடுக்­கப்­பட்­டது.