'நட்சத்திரங்களில் எழுதப்பட்ட வெற்றி'

1 mins read
9a2e2f94-2e78-4818-b444-19912aa9bf1c
-

இஸ்­தான்­புல்: முதன்­மு­றை­யாக ஐரோப்­பிய வெற்­றி­யா­ளர் லீக் கிண்­ணத்தை (சாம்­பி­யன்ஸ் லீக்) வென்று சாதித்­துள்­ளது இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு.

துருக்­கி­யின் இஸ்­தான்­புல் நக­ரில் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று அதி­காலை நடந்த இறுதிப் போட்­டி­யில் சிட்டி குழு 1-0 என்ற கோல் கணக்­கில் இத்­தா­லி­யின் இன்­டர் மிலான் குழு­வைப் போராடி வீழ்த்­தி­யது.

ஆட்­டத்­தின் 68வது நிமி­டத்­தில் விழுந்த அந்த ஒரே கோலை அடித்­த­வர் ஸ்பா­னிய ஆட்­டக்­கா­ர­ர் ரோட்ரி ஹெர்­னாண்­டஸ்.

போட்­டிக்­குப்­பின் பேசிய சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா, "வெற்­றி­பெற மிகக் கடி­ன­மாக இருந்­தது," என்­றார்.

"எங்­கள் குழு­வி­னர் மிகச் சிறப்­பாக விளை­யா­டி­னர். பொறு­மை­யாக இருக்­கும்­படி ஆட்ட இடை­வே­ளை­யின்­போது அவர்­களி­டம் சொன்­னேன். இந்த ஆட்­டம் ஒரு நாண­யம் போன்­றது என்­ப­தால் கொஞ்­சம் அதிர்ஷ்­ட­மும் தேவைப்­பட்­டது.

"இந்த வெற்றி நட்­சத்­தி­ரங்­களில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. அது எமக்கே சொந்­தம்," என்­றார் கார்­டி­யோலா.

இத­னை­ய­டுத்து, இந்த 2022-23 பரு­வத்­தில் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக், எ­ஃப்ஏ கிண்­ணம், வெற்­றி­யா­ளர் கிண்­ணம் என மூன்று தொடர்­களில் வாகை­சூடி, சிட்டி குழு வர­லாறு படைத்தி­ருக்­கிறது.

அத்­து­டன், ஒரு நிர்­வா­கி­யாக கார்­டி­யோலா வெற்­றி­யா­ளர் கிண்­ணத்தை வென்­றி­ருப்­பது இது மூன்­றா­வது முறை. முன்­ன­தாக, 2009, 2011ஆம் ஆண்­டு­களில் பார்­சி­லோனா குழு சார்­பில் அவர் இத­னைச் சாதித்­துக் காட்­டி­யி­ருந்­தார்.