இம்முறையும் இறுதியில் கோட்டைவிட்ட இந்தியா

இம்முறையும் இறுதியில் கோட்டைவிட்ட இந்தியா

2 mins read
a029410c-6a56-48e4-8ebe-9f82e29ae997
-

லண்­டன்: டெஸ்ட் கிரிக்­கெட்­டில் உலக வெற்­றி­யா­ளர் பட்­டத்தை ஆஸ்­தி­ரே­லிய அணி கைப்­பற்­றி­யது.

லண்­டன் ஓவல் அரங்­கில் நடந்த இறு­திப் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லிய அணி 209 ஓட்ட வித்தி­யா­சத்­தில் இந்­திய அணி­யைத் தோற்­க­டித்­தது.

இம்­மா­தம் 7ஆம் தேதி தொடங்­கிய இப்­போட்­டி­யில் பூவா தலை­யா­வில் வென்ற இந்­திய அணித்­த­லை­வர் ரோகித் சர்மா முத­லில் பந்­து­வீச்­சைத் தேர்­வு­செய்­தார்.

அத­னை­ய­டுத்து, முத­லில் பந்­த­டித்த ஆஸ்­தி­ரே­லிய அணி தனது முதல் இன்­னிங்­சில் 469 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. அவ்வணி வீரர்­கள் டிரா­விஸ் ஹெட் 163 ஓட்­டங்­க­ளை­யும் ஸ்டீ­வன் ஸ்மித் 121 ஓட்­டங்­க­ளை­யும் எடுத்­த­னர்.

அதன்­பின் தனது முதல் இன்­னிங்­சைத் தொடங்­கிய இந்­திய அணி எல்லா விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்து 296 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது. அதி­க­பட்­ச­மாக அஜிங்­கிய ரகானே 89 ஓட்­டங்­க­ளைச் சேர்த்­தார்.

பின்­னர் மீண்­டும் பந்­த­டித்த ஆஸ்­தி­ரே­லிய அணி தனது இரண்­டா­வது இன்­னிங்­சில் எட்டு விக்­கெட் இழப்­பிற்கு 270 ஓட்­டங்­களை எடுத்த நிலை­யில், பந்­த­டிப்பை முடித்­துக்­கொள்­வதாக அதன் தலை­வர் பேட் கம்மின்ஸ் அறி­வித்­தார்.

இத­னைத் தொடர்ந்து, 444 ஓட்­டங்­கள் எடுத்­தால் கிண்­ணம் கையில் வந்­து­சே­ரும் என்ற நிலை­யில், தனது இரண்­டா­வது இன்­னிங்­சைத் தொடங்­கி­யது இந்­திய அணி.

நான்­காம் நாள் ஆட்ட முடி­வில் மூன்று விக்­கெட் இழப்­பிற்கு 164 ஓட்­டங்­களை அவ்வணி எடுத்­தி­ருந்­தது. விராத் கோஹ்­லி­யும் ரகா­னே­வும் களத்­தி­லி­ருந்­த­தால் இந்­திய ரசி­கர்­கள் நம்­பிக்­கை­யு­டன் இருந்­த­னர்.

ஆனால், ஐந்­தாம் நாளில் தன் பங்­குக்கு மேலும் ஐந்து ஓட்­டங்­க­ளைச் சேர்த்த நிலை­யில், 49 ஓட்­டங்­க­ளு­டன் நடை­யைக் கட்­டி­னார் கோஹ்லி. ஜடே­ஜா­வும் ஓட்­ட­மெ­டுக்­கா­மல் வந்த வேகத்­தி­லேயே திரும்ப இந்­திய அணி­யைத் தோல்வி மேகம் சூழ்ந்­தது.

இறு­தி­யில் 234 ஓட்­டங்­களுக்கு எல்லா விக்­கெட்­டு­களை­யும் இழந்து, இந்­திய அணி 209 ஓட்ட வித்­தி­யா­சத்­தில் தோற்­றுப்­போ­னது.

கடந்த 2021ஆம் ஆண்­டி­லும் இறு­திப்­போட்­டி­வரை முன்­னே­றிய இந்­தியா, நியூ­சி­லாந்­தி­டம் வெற்றி வாய்ப்­பைப் பறி­கொ­டுத்­தது நினை­வு­கூ­ரத்­தக்­கது.