அஸ்தானா: வடகிழக்கு கஸக்ஸ்தானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 14 பேர் இறந்துவிட்டதாக அந்நாட்டின் அவசர நிலவர அமைச்சு தெரிவித்து உள்ளது.
காட்டுத் தீ பரவிய வேளையில் இதுவரை 316 பேர் வெளியேற்றப்பட்டதாக அமைச்சு நேற்று கூறியது. காட்டுத் தீ கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வீடுகள் பாதுகாப்பாக இருந்தபோதிலும், கடும் வெப்பத்தாலும் காற்றுத் திசை மாறியதாலும் மீட்புப் பணிக்குத் தடங்கல் ஏற்பட்டது.
காட்டுத்தீயை அணைக்கும் முயற்சிகளில் 1,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மின்னல் தாக்கியதால் காட்டுத் தீ மூண்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.