அலோர் ஸ்டார்: மலேசிய கல்விச் சான்றிதழ் தேர்வை 14,858 மாணவர்கள் எழுதாததற்கான காரணத்தை அந்நாட்டு கல்வி அமைச்சு விசாரிக்கவுள்ளது.
மொத்தம் 388,832 தேர்வாளர்களில் இந்த எண்ணிக்கை 3.8 விழுக்காடு என்பதைச் சுட்டிய கல்வி அமைச்சர் ஃபடிலா சிடேக், இதற்குத் தீர்வுகாண சரியான செயல்முறை குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

