300 கிலோ உடல் எடை கொண்ட ஆடவரைத் தூக்க பளுதூக்கி தேவைப்பட்டது

300 கிலோ உடல் எடை கொண்ட ஆடவரைத் தூக்க பளுதூக்கி தேவைப்பட்டது

1 mins read
33d76774-6bf8-455f-98d4-df197fcdf9b2
11 வயதிலிருந்து உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ள முகம்மது ஃபாஜ்ரி. படம்: JALAN VIRAL / டுவிட்டர், VIRAL DONGS / டிக்டாக் -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 300 கிலோகிராம் உடல் எடை கொண்ட ஆடவரை வீட்டிலிருந்து லாரிக்கு பளுதூக்கியால் (ஃபோர்க்லிஃப்ட்) தூக்கிச் சென்றனர்.

லாரியில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

புதன்கிழமையன்று தாங்கெராங் நகரில் உள்ள மருத்துவமனையில் முகம்மது ஃபாஜ்ரி எனும் அந்த 27 வயது ஆடவர் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்நகரம் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கடந்த எட்டு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருந்ததால் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன.

11 வயதிலிருந்து திரு முகம்மது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடலின் பல பகுதிகளில் கிருமித்தொற்று இருந்தது, கால்களில் வலி இருந்திருக்கிறது.