ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான பேருந்து விபத்து; குறைந்தது 10 பேர் மரணம்

1 mins read
da1da6f2-7ae0-4526-8c9f-e78c76abf812
பேருந்து விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் இடம்: படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாகக் காணப்படாத மோசமான பேருந்து விபத்தில் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

அபாயம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக ஓர் ஆடவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.30 மணி) சிட்னி நகருக்கு சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரேட்டா நகரில் விபத்து நிகழ்ந்தது.

பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர்.

25 பேர் காயமுற்றனர்.

ஹன்டர் வட்டாரத்தில் நடைபெற்ற திருமணத்துக்குச் சென்றிருந்த பேருந்து திரும்பி வரும்போது சாலையிலிருந்து தடம் புரண்டு கவிழ்ந்தது.

பேருந்தை ஓட்டிய 58 வயது ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓட்டுநரைப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமையன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் மாண்டோர், காயமடைந்தோர் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

இச்சம்பவம், ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஆக மோசமான பேருந்து விபத்து.