தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

1 mins read
f743ec24-c34f-45c5-85ef-175c399d1f4c
காட்டு யானைகள் நுழைந்ததால் பள்ளியில் ஏற்பட்ட சேதம். படம்: ரசீடி ரசீட் / ஃபேஸ்புக் -

சுங்கை சிப்புட் (மலேசியா): மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புறப் பள்ளிக்குள் சில காட்டு யானைகள் நுழைந்தன.

அதனால் பள்ளிக் கட்டடத்தில் சேதம் ஏற்பட்டது.

இச்சம்பவம் ஜூன் மாதம் எட்டாம் தேதியன்று அதிகாலை இரண்டு மணியளவில் லாசா பேட்டைக்கு அருகே இருக்கும் கெபாங்சான் பொஸ் பெர்வோர் பள்ளியில் நிகழ்ந்தது.

இப்பகுதி பேராக் தலைநகர் ஈப்போவுக்கு சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வகுப்பறைகளின் சன்னல்கள், சமையலறை உள்ளிட்டவற்றை யானைகள் சேதப்படுத்தின.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.