தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸ்வே சோதனைச் சாவடியில் மின்-வாயில் இயங்காவிட்டால் அருகிலுள்ள முகப்பில் உதவி நாடலாம்

1 mins read
88029b87-5691-43c1-b6e7-d25aef488851
படம்: பெர்னாமா -

ஜோகூர் பாருவின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள மின்-வாயில்களைப் பயன்படுத்த முடியாத அல்லது பதிவுசெய்யமுடியாத சிங்கப்பூரர்கள் அந்த மின்-வாயில்களுக்கு அருகில் உள்ள முகப்பில் உதவி நாடலாம் என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

"மின்-வாயிலைப் பயன்படுத்துவதில் பிரச்சினையை எதிர்நோக்கும் வருகையாளர்களின் விவரங்கள் குடிநுழைவு அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.

மின்-வாயிலை அடுத்த நபர் தொடர்ந்து பயன்படுத்தி நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்கமுடியும்.

மின்-வாயிலைப் பயன்படுத்த விரும்பும் சிங்கப்பூரர்கள், குறைந்தது மூன்று மாதங்களுக்குச் செல்லுபடியாகக்கூடிய கடப்பிதழை வைத்திருக்கவேண்டும்.

பயணத்திற்கு மூன்று நாள்கள் முன்னதாக மலேசிய மின்னிலக்க வருகை அட்டையையும் சமர்ப்பித்திருக்கவேண்டும்.