முன்னாள் இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கோனி காலமானார்

முன்னாள் இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கோனி காலமானார்

1 mins read
d21113e8-ee4d-44e6-9834-b7f13a220528
ஏசி மிலான் குழுவின் உரிமையாளராக இருந்தவர் பெர்லுஸ்கோனி. படம்: இபிஏ -
multi-img1 of 2

மிலான்: முன்னாள் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்.

அவருக்கு வயது 86.

திரு பெர்லுஸ்கோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக அதிக காலம் இத்தாலியப் பிரதமராகப் பதவி வகித்தவர்.

வெள்ளிக்கிழமையன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது வேறொரு பிரச்சினைக்கு அவர் சிகிச்சை பெற்றிருந்தார்.

திரு பெர்லுஸ்கோனிக்குப் பல இதயம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்தன.

பல பாலியல், ஊழல் சர்ச்சைகளில் சிக்கிய திரு பெர்லுஸ்கோனி, 30 ஆண்டுகளாக பிரபல இத்தாலிய காற்பந்துக் குழுவான ஏசி மிலானின் உரிமையாளராகவும் இருந்தார்.