'மூன்று கிராமங்களை கைப்பற்றிவிட்டோம்'

'மூன்று கிராமங்களை கைப்பற்றிவிட்டோம்'

1 mins read
6ecc4cdf-6676-4dac-8617-c74b6643c097
-

கியவ்: ரஷ்­யாவை எதிர்த்து கடு­மை­யாக போரிட்­ட­தில் டோனெட்­ஸில் மூன்று கிரா­மங்­களை மீண்­டும் பிடித்­து­விட்­டோம் என்று உக்­ரேன் நேற்று அறி­வித்­தது.

முதல் முறை­யாக ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் உக்­ரேன் முன்­னே­றி­யி­ருக்­கிறது.

ஆனால் ஞாயிற்­றுக்கிழமை அன்று ரஷ்ய கட்­டுப்­பாட்­டில் உள்ள பகு­தி­யில் பொது­மக்­களை வெளி­யேற்­றிக் கொண்­டி­ருந்த மீட்­புப் படகு மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்­த­தில் குறைந்­தது மூவர் கொல்­லப்­பட்­ட­னர், 23 பேர் காயம் அடைந்­த­னர் என்று கெர்­சன் வட்­டார அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

வாஷிங்­ட­னைத் தள­மா­கக் கொண்ட சிந்­தனையாளர் ஆய்­வுக் குழு, குறைந்­தது நான்கு முன் ­க­ளங்களில் கியவ் படை­யி­னர் ரஷ்­யாவை எதிர்த்து எதிர்த்­தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று தெரி­வித்­தது.

பல மாத எதிர்­பார்ப்­பு­க­ளுக்­குப் பிறகு ரஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ரான எதிர்த்­தாக்­கு­தல் தொடங்­கி­யதை உக்­ரே­னிய அதி­பர் வோலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி சனிக்­கி­ழமை அன்று உறு­திப்­ ப­டுத்­தி­னார்.

பின்­னர் ஞாயிற்­றுக்­கி­ழமை, மூன்று கிரா­மங்­களை மீண்­டும் கைப்­பற்­றியதாக அவர்­கள் அறி­வித்­த­னர்,

"டோனெட்ஸ் வட்­டா­ரத்­தின் நெஸ்­குச்னே மீண்­டும் உக்­ரே­னிய கொடி­யின்கீழ் வந்­துள்­ளது," என்று மாநில எல்லை பாது­காப்பு சேவை கூறி­யது.

முன்­ன­தாக ஞாயிற்­றுக்­கி­ழமை உக்­ரே­னின் ராணு­வம் அரு­கில் உள்ள பிளா­கே­டாட்னே கிரா­மத்­தைக் கைப்­பற்­றி­ய­தா­கக் கூறி­யது. இடிந்த கட்­டடத்­தின் மீது ராணுவ வீரர்­கள் உக்­ரேன் கொடியை ஏற்­றிய காணொ­ளியை தரைப்­ப­டை­யி­னர் வெளி­யிட்­டுள்­ள­னர்.

உக்­ரே­னியப் படை­கள், பல ரஷ்ய வீரர்­க­ளை­யும் பிடித்­துள்­ள­தாக தொலைக்­காட்­சி­யில் பேசிய உக்­ரே­னின் ராணு­வப் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.