சிட்னி: ஆஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகள் இல்லாத பேருந்து விபத்தில் திருமண விருந்தினர்கள் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
சிட்னியிலிருந்து தென்மேற்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரேட்டா நகரத்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. ஹண்டர் பகுதியில் வளைவான சாலையில் பேருந்து திரும்பியபோது கவிழ்ந்தது. திருமண நிகழ்வுகளுக்குப் பிரபலமான ஹண்டரில் திரு மணத்தை முடித்துக்கொண்டு 35 விருந்தினர்கள் பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. இதில் 25 பேர் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

