ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 300 கிலோ எடையுள்ள ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பாரந்தூக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாங்கெராங் நகர மருத்துவமனையில் ஜூன் 7ஆம் தேதியன்று 27 வயது முஹமட் ஃபஜ்ரி சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
எட்டு மாதங்களாக படுக்கையிலேயே கிடந்ததால் அவரது உடல் நிலையில் பல கோளாறுகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். முஹமட், 11 வயதிலிருந்து பருமனாக இருந்து வருகிறார். இதனால் தோல், கை, கால்கள் உட்பட பல பாகங்களில் தொற்று ஏற்பட்டன. முஹமட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உள்ளூர் அதிகாரிகள் உதவி கேட்டதாக சிலெடக் மாவட்ட பேரிடர் நிர்வாக முகவையின் தலைமை நிர்வாகி முல்யாடி கூறினார்.
"அங்கு வந்தபோது சாலை குறுகலாக இருந்தது. பருத்த உடலுடன் அவர் சாலையில் நடக்கவும் முடியாது. இதனால் பாரந்தூக்கியை கொண்டுவந்தோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.