ஏவுகணைத் தாக்குதல்; குறைந்தது ஆறு பேர் பலி

2 mins read
2bf80d58-a31f-4ec2-bf4d-75e5070685d2
-

கிரிவி ரி: உக்­ரே­னின் மத்­தி­யப் பகு­தி­யில் உள்ள கிரிவி ரி நக­ரம் மீது ரஷ்யா நேற்று முன்­தி­னம் இரவு மிகக் கடு­மை­யான ஏவு­கணைத் தாக்­கு­த­லைத் தொடுத்­தது.

இதில் குறைந்­தது ஆறு பேர் மாண்­ட­னர். ஏறத்­தாழ 25 பேர் காய­முற்­ற­தா­க­வும் பொது­மக்­க­ளின் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களும் இதர கட்­ட­டங்­களும் சேத­முற்­ற­தா­க­வும் உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஐந்து மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தி­லும் சரக்­குக் கிடங்கு ஒன்­றி­லும் கொழுந்­து­விட்டு எரிந்த தீயை அணைக்க தீய­ணைப்­புப் படை­யி­னர் பல மணி நேரம் போரா­டி­யதாக டினி­பி­ரோ­பெட்­டி­ரோவ்ஸ்க் பகு­தி­யின் ஆளுநர் திரு செர்ஹி லைசாக் தெரி­வித்­தார்.

"இடி­பா­டு­க­ளுக்கு அடி­யில் சிலர் இன்­னும் மாட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர். இடிந்து விழுந்த கட்­ட­டம் தீப்­பி­டித்து எரி­கிறது," என்­றார் அவர்.

ரஷ்யா பாய்ச்­சிய ஏவு­க­ணை­களில் மூன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறிய திரு லைசாக், மற்ற ஏவு­க­ணை­கள் இலக்கை அடைந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

தாக்­கப்­பட்ட கிரிவி ரி நக­ரம் உக்­ரே­னிய அதி­பர் வொலொ­டி­மி­யர் ஸெலென்ஸ்­கி­யின் சொந்த ஊர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தாக்­கு­த­லுக்­கு அதி­பர் ஸெலென்ஸ்கி கடும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

"குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள், சிறு நக­ரங்­கள், பொது­மக்­களை ரஷ்­யப் படை­கள் தொடர்ந்து குறி­வைத்­துத் தாக்­கு­கின்­றன. இத­னால் உயி­ரி­ழந்­தோர், காய­ம­டைந்­தோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது," என்று அவர் கூறி­னார்.

உக்­ரேன் நேரப்­படி நேற்று முன்­தி­னம் அதி­காலை அந்­நாடு முழு­வ­தி­லும் எச்­ச­ரிக்கை சங்கு ஒலிக்­கப்­பட்­டது.

உக்­ரே­னியத் தலை­ந­கர் கியவ்வை நோக்கி அனுப்­பப்­பட்ட ஏவு­க­ணை­கள் அனைத்­தை­யும் உக்­ரே­னிய ஆகா­யப் படை சுட்டு வீழ்த்­தி­ய­தாக உக்­ரே­னிய ராணுவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ரஷ்யா பாய்ச்­சிய 14 ஏ­வு­கணை­களில் பத்து ஏவு­க­ணை­களைத் தனது ஆகா­யப் படை அழித்­த­தாக உக்­ரே­னிய ராணு­வம் கூறி­யது.

ரஷ்யா அனுப்­பிய நான்கு ஆளில்லா வானூர்­தி­களில் ஒன்­று அழிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த ஆளில்லா வானூர்­தி­கள் ஈரா­னில் தயா­ரிக்­கப்­பட்­டவை என்று உக்­ரேன் கூறி­யது.