கடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தாய்லாந்தில் மோசமான டெங்கி பாதிப்பு

2 mins read
ba03891a-528b-4d09-8cdd-a6c95331573f
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் கடந்த மூன்று ஆண்­டு­கள் இல்­லாத அள­வுக்கு டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை மிக அதி­க­மா­கப் பதி­வாகி உள்­ளது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து கடந்த மாதம் வரை 18,173 பேர் டெங்­கி­யால் நோய்­வாய்ப்­பட்­ட­னர். கடந்த ஆண்டு மே மாதத்­தை­விட இது 4.2 மடங்கு அதி­கம் ­என்று தாய்­லாந்து அர­சாங்­கம் தெரி­வித்­தது.

கடந்த ஜன­வரி மாதத்­துக்­கும் மே மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் வாரத்­துக்­குச் சரா­ச­ரி­யாக 900 பேருக்கு டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­டது. இது­வரை 15 பேர் மாண்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தலை­ந­கர் பேங்­காக்­கில் ஆக மோச­மான பாதிப்பு பதி­வா­னது. ஐந்து வயது முதல் 14 வயது வரை­யி­லான சிறார் ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களை அடுத்து 15 வயது முதல் 24 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்.

பரு­வ­ம­ழைக் காலம் கார­ண­மாக ஜூன் மாதத்­துக்­கும் ஆகஸ்ட் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தாய்­லாந்­தில் டெங்கி பாதிப்பு அதி­க­ரிப்­பது வழக்­கம் என்­றும் செப்­டம்­பர் மாதத்­தில் பாதிப்பு குறை­யும் என்­றும் அந்­நாட்­டின் பொது சுகா­தார அமைச்சு கூறி­யது.

கொசுக்­களை விரட்­டும் திர­வங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது, கட்­டி­லைச் சுற்றி வலை விரித்து தூங்­கு­வது போன்ற பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு கொசுக் கடி­க­ளைத் தவிர்க்­கும்­படி தாய்­லாந்து மக்­க­ளுக்கு அமைச்சு ஆலோ­சனை வழங்­கி­யது.

இரண்டு நாள்­க­ளி­லி­ருந்து ஏழு நாள்­க­ளுக்கு நீடிக்­கும் கடு­மை­யான காய்ச்­சல், தசை வலி, கண் வலி போன்ற அறி­கு­றி­கள் இருந்­தால் உட­ன­டி­யாக மருத்­து­வரை அணுக வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, மழைக்­கா­லத்­தின்­போது கொசு இனப்­பெருக்க இடங்­களை அழிக்க டெங்கி தடுப்பு இயக்­கத்­தில் சேர அரசு ஊழி­யர்­க­ளை­யும் மற்ற துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் தாய்­லாந்து அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கிறது.