மலேசியாவின் உரிமைகள், இறையாண்மை கடுகளவும் விட்டுக்கொடுக்கப்படாது; அன்வார் இப்ராகிம் உத்தரவாதம்

மலேசியாவின் உரிமைகள், இறையாண்மை கடுகளவும் விட்டுக்கொடுக்கப்படாது; அன்வார் இப்ராகிம் உத்தரவாதம்

1 mins read
b5ae8a9d-ad82-4a72-9b0c-74c53d2f9ea1
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் உரி­மை­கள், இறை­யாண்மை சிறி­த­ள­வும் விட்­டுக்­கொ­டுக்­கப்­ப­டாது என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் உறுதி அளித்­துள்­ளார்.

எல்­லைப் பகு­தி­யில் உள்ள சில நிலப்­ப­ரப்­பு­கள், தீவு­கள் குறித்து இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே சர்ச்சை நீடிக்­கிறது.

தென்­சு­லா­வீ­சி­யில் உள்ள செபாத்­திக் தீவு போன்ற இடங்­கள் தங்­க­ளுக்­குச் சொந்­த­மானவை என்று இரு­த­ரப்­பும் கூறி வரு­கின்­றன. இது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கிறது.

கடல்­துறை தொடர்­பாக மலே­சி­யா­வுக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடையே கடந்த 18 ஆண்­டு­க­ளாக இருந்து வரும் பிரச்­சி­னையை முடி­வுக்­குக் கொண்டு வரும் வகை­யில் அண்­மை­யில் கடல்­துறை ஒப்­பந்தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­ட­தாக திரு அன்­வார் கூறி­னார்.

ஆனால் சர்ச்­சைக்­கு­ரிய இடங்­கள் கடற்­துறை ஒப்­பந்­தங்­களில் இடம்­பெ­று­வ­தில்லை என்று திரு அன்­வார் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

செபாத்­திக் தீவு தொடர்­பான விவ­கா­ரம் குறித்து கலந்­து­ரை­யாட சாபா மாநி­லத்­தைச் சேர்ந்த பிர­தி­நிதி ஒரு­வரை அழைக்க இருப்­ப­தாக திரு அன்­வார் தெரி­வித்­தார்.

தஞ்­சோங் பெலேப்­பாஸ் துறை­மு­கம் அரு­கில் உள்ள எல்­லை­களும் ஒப்­பந்­தங்­களில் இடம்­பெ­ற­வில்லை என்று அவர் கூறி­னார்.

"இந்­தோ­னீ­சிய நிபு­ணர்­க­ளைப் பொறுத்­த­வரை சர்ச்­சைக்­கு­ரிய இடங்­கள் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் சொந்­த­மா­னவை என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்­துள்­ளார். ஆனால் அந்த இடங்­கள் மலே­சி­யா­வுக்­குச் சொந்­த­மா­னவை என்று நாங்­கள் வலி­யு­றுத்தி வரு­கி­றோம்.

"எனவே, தென்­சு­லா­வீசி எல்­லைப் பகு­தி­கள் தொடர்­பான பேச்­சு­வார்த்தை தொடர்­கிறது," என்று நேற்று நடை­பெற்ற மலே­சிய நாடா­ளு­மன்ற அமர்­வில் பிர­த­மர் அன்­வார் தெரி­வித்­தார்.