சாலையோரம் கிடந்த சடலங்கள்; ஒருவர் கைது

1 mins read
63e030a0-8b71-407b-9773-9e1cdbf05b22
-

லண்­டன்: இங்­கி­லாந்­தின் நாட்­டிங்­ஹம் நக­ரில் சாலை­யோ­ரம் மூன்று சட­லங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து, ஆட­வர் ஒரு­வரை அந்­நாட்டு காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அந்த மூன்று பேரை­யும் அவர் கொலை செய்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, வேனை ஓட்­டிச் சென்ற மூன்று பேர் மீது மோதிக் கொலை செய்ய அந்த ஆட­வர் முயன்­ற­தா­கக் கூறப்­படு­கிறது.

அந்த மூவ­ரும் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

அதி­காலை நேரத்­தில் நக­ரின் மையப் பகு­தி­யில் சாலை­யோ­ரம் கிடந்த இரு சட­லங்­கள் முத­லில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் நக­ரின் மையப் பகு­திக்கு வெளியே இன்னொரு சடலம் கண்டெடுக்கப்பட்ட தாகவும் காவல்­துறை தெரி­வித்­தது.

"மூன்று பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். வேன் மோதி மூவர் காய­ம­டைந்­துள்­ள­னர். இதற்­கெல்­லாம் கைது செய்­யப்­பட்­ட­வர்­தான் கார­ணம் என்று நம்­பு­கி­றோம்.

"விசா­ரணை ஆரம்­ப­கட்­டத்­தில் உள்­ளது. என்ன நடந்­தது என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க துப்­பறி­வா­ளர்­கள் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்," என்று பிரிட்­டிஷ் காவல்­துறை செய்தியாளர்களிடம் கூறி­யது.