தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நேட்டோ அதன் புதிய தொடர்பு அலுவலகத்தை அடுத்த ஆண்டு அமைக்க இருக்கிறது.
தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படத் தேவையான மையமாக அது பயன்படுத்தப்படும்.
தோக்கியோவில் அலுவலகம் திறக்க அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ திட்டமிடுவதாக அமெரிக்காவுக்கான ஜப்பானியத் தூதர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதற்கு பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிய பசிபிக்கில் தனது தொடர்புகளை வலிமைப்படுத்த நேட்டோ புதிய அலுவலகத்தை தோக்கியோவில் திறக்கிறது.
ஆசிய பசிபிக்கில் உள்ள தனது நான்கு பிரதான பங்காளிகளுடனான தொடர்பை வலுப்படுத்துவதுடன் இணையப் பாதுகாப்பு, விண்வெளி போன்றவை குறித்தும் ஒன்றிணைந்து செயல்பட நேட்டோ இலக்கு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

