இடியுடன் மழை பெய்தும் வெற்றி அணிவகுப்பு நடந்தேறியது
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய காற்பந்துப் போட்டிகளை வென்றுள்ள மான்செஸ்டர் சிட்டி அதைக் கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் வெற்றி அணிவகுப்பை நடத்தியது. இடியுடன் மழை பெய்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிவகுப்பைக் காணத் திரண்டனர்.
மன்னிப்பு கேட்ட சம்மேளனம்
சிங்கப்பூர்: மிதிவண்டி போட்டியை நடத்த தேவையான அனுமதியை அரசாங்க அமைப்புகளிடம் இன்னும் பெறாததால் ஓசிபிசி தேசிய மிதிவண்டிப் போட்டி இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிங்கப்பூர் மிதிவண்டி சம்மேளனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

