குறைந்தது 59 அகதிகள் கடலில் மூழ்கி மாண்டனர்

குறைந்தது 59 அகதிகள் கடலில் மூழ்கி மாண்டனர்

2 mins read
b478b315-e8e1-4c97-9f69-937a06fd94ce
-

ஏதன்ஸ்: கிரீ­சுக்கு அரு­கில் உள்ள கடற்­ப­கு­தி­யில் படகு ஒன்று கவிழ்ந்­த­தில் குறைந்­தது 59 அக­தி­கள் கட­லில் மூழ்கி மாண்­ட­தாக கிரேக்க கட­லோ­ரப் பாது­காப்­புப் படை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

ஏறத்­தாழ 100 பேர் காப்­பாற்­றப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் படகு கவிழ்ந்­த­போது அதில் எத்­தனை பேர் இருந்­தார்­கள் என்று இன்­னும் தெரி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

எனவே, மாண்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இதுவே கிரீ­ஸின் கடற்­ப­கு­தி­யில் இவ்­வாண்டு நிகழ்ந்­துள்ள மிக மோச­மான படகு விபத்து.

சம்­பந்­தப்­பட்ட படகு இத்­தா­லிக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­தாக கட­லோ­ரப் பாது­காப்­புப் படை கூறி­யது.

அந்­தப் படகு அனைத்­து­ல­கக் கடற்­ப­கு­தி­யில் சென்­று­கொண்­டி­ருந்­ததை ஐரோப்­பிய ஒன்­றிய எல்­லைக் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வுக்­குச் சொந்­த­மான விமா­னம் நேற்று முன்­தி­னம் கண்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பட­கில் இருந்­தோ­ருக்கு உதவ கிரேக்க அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் முன்­வந்­த­தா­க­வும் ஆனால் அதை அவர்­கள் ஏற்க மறுத்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. சில மணி நேரம் கழித்து, அந்­தப் படகு கவிழ்ந்­த­தா­க­வும் அதில் இருந்­த­வர்­கள் கட­லில் விழுந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­ய­னர்.

அவர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி­களை கிரேக்க அதி­கா­ரி­கள் உட­ன­டி­யாக முடுக்­கி­விட்­ட­னர்.

அந்­தப் படகு லிபி­யா­வைச் சேர்ந்­தது என்­றும் அதில் பய­ணம் செய்­த­வர்­களில் பெரும்­பா­லா­னோர் 20 வய­தி­லி­ருந்து 30 வய­துக்கு உட்­பட்ட இளை­யர்­கள் என்­றும் கிரேக்க ஊட­கம் தெரி­வித்­தது.

ஆனால் பட­கில் இருந்­தோர் எந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள், படகு எங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றது ஆகிய விவ­ரங்­களை அதி­கா­ரி­கள் வெளி­யி­ட­வில்லை.

உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­வர்­கள் கல­மாட்டா நக­ரத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

மத்­திய கிழக்கு, ஆப்­பி­ரிக்கா, ஆசி­யா­வி­லி­ருந்து ஐரோப்­பா­வுக்­குச் செல்­லும் அக­தி­களில் பெரும்­பா­லா­னோர் கிரேக்க கடற்­ப­குதி வழி­யா­கத்­தான் செல்­கின்­ற­னர்.