ஒடேசா: உக்ரேனுக்குச் சொந்தமான கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யப் படைகள் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் குறைந்தது மூன்று பேர் மாண்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
ஏறத்தாழ 13 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒடேசா நகரைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்துவது மிகவும் அரிது.
இந்நிலையில், உக்ரேனின் டொனெட்ஸ்க் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக மூன்று பேர் மாண்டனர்.
இதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்க உக்ரேன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டின் நேற்று முன்தினம் கூறினார். ஆனால் ரஷ்யாவிடம் இழந்த சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.

