ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படும் மாணவர்

ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படும் மாணவர்

1 mins read
37ddb1d7-f7f4-49ae-986f-a162a9f69d76
இச்சம்பவம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்தது. படம்: தி ஸ்டார் -

ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு மாணவர் ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

அம்மாநிலத்தின் தலைநகர் ஷா ஆலமில் இருக்கும் திடல் ஒன்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கிறது.

மாணவரைப் பள்ளியில் இறக்கிவிடுவதற்காக அது தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் தொடர்பில் மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று ஜாலான் குனுங் நுவாங்கிற்கு அருகே உள்ள திடலில் ஹெலிகாப்டர் 15 நிமிடம் நின்றிருந்ததாக ஷா ஆலம் வட்டாரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை அதிகாரி முகம்மது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் அன்று காலை சுமார் எட்டு மணிக்கு நிகழ்ந்ததாக அவர் கூறினார்.