கினபாலு மலையைச் சுற்றி 'தங்க வளையம்'

1 mins read
a9ba61a6-3800-4120-9352-902776694163
படம்: டேவரொண்ட் குராடிங் / ஃபேஸ்புக் -

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் இருக்கும் கினபாலு மலையின் உச்சிகளில் ஒன்றை 'தங்க வளையம்' சுற்றியிருக்கிறது.

சூரிய ஒளியால் இந்த அற்புத நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அழகிய காட்சியைக் கொண்ட படம் சமூக ஊடகங்கள்வழி பலரால் பகிரப்பட்டது.

மலையேறி வழிகாட்டியான டேவரொண்ட் குராடிங் என்பவர் இப்படத்தை எடுத்தார்.

புதன்கிழமையன்று இதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

அதற்கு முன்பு ஒரு நாள் ஆறு மணியளவில் சூரிய உதயத்தின்போது இப்படத்தை எடுத்ததாக திரு குராடிங் தெரிவித்தார்.