பாப்புவா நியூகினி- அமெரிக்கா ஒப்பந்தம்

பாப்புவா நியூகினி- அமெரிக்கா ஒப்பந்தம்

1 mins read
5f8cc659-2d65-4798-a5ce-f43d1f552708
-

போர்ட் மொரேஸ்பி: அமெ­ரிக்­கா­வும் பாப்­புவா நியூகினி­யும் முக்­கிய பாது­காப்பு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

அதன்­படி பாப்­புவா நியூகினி­யில் உள்ள ஆறு முக்­கிய துறை­மு­கங்­க­ளி­லும் விமான நிலை­யங்­க­ளி­லும் அமெ­ரிக்கா அதன் படை­களை நிறுத்­த­லாம்.

அவற்­றில் லொம்­பு­ரும் கடற்­படை முகா­மும் அடங்­கும்.

பசி­பிக் கட­லின் தென்­மேற்கு முனை­யில் இருக்­கும் லொம்­பு­ருமை இதற்கு முன்பு பிரிட்­டன், ஜெர்­மனி, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ள் பாது­காப்பு அர­ணா­கப் பயன்­ப­டுத்தியிருப்பது குறிப்­பிடத்­தக்­கது.

ஒப்­பந்­தப்­படி அமெ­ரிக்­கப் படை­கள் பாப்­புவா நியூகினிக்­குள் எவ்­வித தடை­யு­மின்றி போக­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாப்­புவா நியூகினி­யில் உள்ள சில இடங்­களில் அமெ­ரிக்கா மேம்­பாட்டு, கட்­டு­மா­னப் பணி­களை நடத்­த­லாம்.

இந்த முக்­கிய ஒப்பந்தத்தில் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் அண்­டனி பிளிங்­க­னும் பாப்­புவா நியூகினி­யின் தற்­காப்பு அமைச்­சர் வின் பக்ரி டாக்­கி­யும் கையெ­ழுத்­திட்­ட­னர்.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் சீனா­வின் ஆதிக்­கத்தை முறி­யடிக்க அமெ­ரிக்கா இந்த நட­வடிக்­கையை எடுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.