ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 'கேவலமான செயல்' என்று சீனா சாடியுள்ளது. அனைத்துலக சட்டத்தின் கொள்கைளை மிதிப்பதற்குச் சமம் என்று சீனா கூறியுள்ளது.
"ஹாங்காங்கின் அடிப்படை சுதந்திரத்தின் சீரழிவு, குறிப்பாக ஜிம்மி லாய் வழக்கு" என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜனநாயக ஆதரவாளரான ஜிம்மி லாயையும் பிற ஜனநாயகவாதிகளையும் குற்றச்சாட்டு, சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.
"ஹாங்காங்கில் நடந்து வரும் மனித உரிமை மீறல் அடக்கு முறைக்கு பொறுப்பான ஹாங்காங்கின் தலைவர் ஜான் லீ மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய மன்றம் குறிப் பிட்ட இலக்கோடு தடைகளை விதிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் அழைப்பு விடுத்தன.
ஆனால் எத்தகைய தடைகள் என்பது பற்றி விவரிக்கப்படவில்லை.
அமெரிக்கா, 2020ல் லீக்கு எதிராக தடைகளை விதித்தது. அந்த ஆண்டில்தான் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியது.
அச்சட்டத்தின்கீழ் அரசியல் சுதந்திரத்தை லீ நசுக்கியதாக அமெரிக்கா கூறியிருந்தது.
பிரிவினை, நாசவேலை, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தால் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்க தேசிய பாதுகாப்புச் சட்டம் வழி வகுக்கிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 483 வாக்குகள் ஆதரவாகவும் ஒன்பது வாக்குகள் எதிராகவும் 42 பேர் வாக்களிக்காத தீர்மானம் 'தோல்வி அடையும்' என்று சீனா கூறியது.

